றுமைஸ் முஹம்மட்.
சம்மாந்துறையில் இயங்கும் அல் அமானா மகளிர் அபிவிருத்தி ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் அல் அமானா மகளிர் ஒன்றியத்தின் தலைவர் அவர்களது இல்லத்தில் இடம் பெற்றது.
அல் அமானா மகளிர் அமைப்பினர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க சமூக சேவகரும், ஆசிய அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தருமான அஸ்மி யாசீன் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து இவ் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அஸ்மி யாசீன் அவர்களுக்கு அவர் தொடர்ச்சியாக சம்மாந்துறையில் உள்ள பல அமைப்புக்களுக்கும், சங்கங்களுக்கும் செய்யும் சேவையினைப் பாராட்டி பொண்ணாடை போர்த்தி கௌரவமும் அளிக்கப்பட்டது.