காரைதீவு சகா.
அம்பாறை மாவட்டத்தில் 24 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன. இதனடிப்படையில் முதற்கட்டமாக 6 பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 18 பாடசாலைகளும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளன.
சம்மாந்துறை கல்வி வலையத்தில் உள்ள 4 பாடசாலைகள் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன அதில் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம், சம்மாந்துறை தாருஸ்ஸலாம் வித்தியாலயம், சம்மாந்துறை அல்-அர்ஷத் வித்தியாலயம் மற்றும் சாளம்பைக் கேணி அஸ்ஷிறாஜ் மகா வித்தியாலயம் ஆகியன இவ்வாறு தரமுயர்த்தப்பட தெரிவாகியுள்ளன.
மத்திய கல்வியமைச்சின் உயரதிகாரிகள் குழுவினர், கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர், வலையக் கல்விப் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டமொன்று திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்றது.
இதன் போதே அம்பாறை மாவட்டத்தில் 24 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தயரமுயர்த்த அங்கிகரிக்கப்பட்டன.