சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றளிக்காதவர்களுக்கு கட்டாயத் தடுப்பூசி போடப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் இறுதி வழிகாட்டுதலின் அடிப்படையில் ஹஜ் பயணத்துக்கு இந்த ஆண்டு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளின் பட்டியலை இந்திய அரசும் வெளியிட்டுள்ளது.

