Ads Area

உலகில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த அரசாங்கமாக சவுதி அரேபிய அரசாங்கம் தெரிவு.

சம்மாந்துறை அன்சார்.

சவூதி அரசாங்கம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக உலகின் மிகவும் நம்பகமான அரசாங்கங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. எடெல்மேனின் 2021 என்ற அமைப்பு (Edelman’s 2021 Trust Barometer) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் அரசாங்கத்தின் செயல்திறன் மீதான நம்பிக்கையின் அளவுகள் 2020 ஜனவரியில் 78 சதவீதத்திலிருந்து 2021 ஜனவரியில் 82 சதவீதமாக உயர்ந்துள்ளது. 28 நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சவுதி அரேபியா முன்னணியில் இருக்க தகுதி பெற்றதுள்ளது. சவுதி அரேபிய அரசாங்கம் மிகவும் செயற்திறன் வாய்ந்த அரசாக உலக நாடுகளை விட உயர்ந்து நிற்கிறது.

இந்த ஆய்வில்  சீனா முதலிடத்திலும், சவுதி அரேபியா இரண்டாவது இடத்திலும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

சவுதி அரேபியாவானது உலகெங்கிலும் காணப்பட்ட மிகப்பெரிய சுகாதார சவாலான கொரோனாவினை கையாண்டதில் சர்வதேச அளவில் மிக உயர்ந்த தரவரிசையில் இருந்துள்ளதாகவும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு மருத்துவ பராமரிப்புக்களையும், இலவச தடுப்பூசிகளையும் வழங்குவதில் முன்னின்றதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe