Ads Area

இலங்கை பாரதிய ஜனதா கட்சி உருவாக்கப்பட்டுள்ளமைக்கு பௌத்தமதகுரு கடும் கண்டனம்.

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியுள்ளது என சிங்கள அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இலங்கை பாரதியஜனதா கட்சி என்ற அமைப்பு செய்தியாளர் மாநாட்டை நடத்தியுள்ளது பகியங்கல ஆனந்த சாகர தேரர் என்ற பௌத்த மதகுரு இலங்கையின் கட்சி அரசியலில் இந்தியா செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தால் பல பிரச்சினைகள் உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் பாரதிய ஜனதா என்ற கட்சி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும என தெரிவித்துள்ள பௌத்தமதகுரு அவ்வாறான செய்தியாளர் மாநாடுகளை தடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe