Ads Area

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க தீர்மானம்.

வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வௌிநாடுகளில் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு நாடு திரும்பும் இலங்கை பிரஜைகளை தனிமைப்படுத்துவதா? இல்லையா? என்பது குறித்தும் ஆராயப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe