தகவல் - சம்மாந்துறை அன்சார்.
புனித ரமழான் மாதம் நெருங்கி வரும் நிலையில் சவுதி அரேபியாவின் சுகாதாரத்துறையினர் ரமழான் மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர். இதனடிப்படையில் ரமழான் மாதத்தில் உணவகங்களில் காலை உணவு (suhoor) மற்றும் நோன்பு திறப்பு உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் பள்ளிவாசல்களின் அமைக்கப்படும் இப்தார் கூடாரங்கள் மற்றும் பொது வெளிகளில் அமைக்கப்படும் இப்தார் கூடாரங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரமலான் மற்றும் ஈத் அல்-பித்ர் நோன்புப் பெருநாள் விடுமுறை நாட்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இது தொடர்பாக பரிந்துரைகள் வழங்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நோன்புகாலங்களில் சிறிய பூங்காக்கள் மூடப்படும் அதே போல் பெரிய பரந்த பூங்காக்களில் உள் அனுமதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரம் மற்றும் செய்தி மூலம் - https://saudigazette.com.sa