Ads Area

துபாயில் இந்தியர் ஒருவரை தலையில் அடித்துக் கொலை செய்த மற்றொரு இந்தியருக்கு 5 வருட சிறை.

துபாயில் இந்தியர் ஒருவரை தலையில் அடித்துக் கொலை செய்த மற்றொரு இந்தியருக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 26 வயது நிரம்பிய இந்தியர் ஒருவரை இவ்வாறு தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். 

தலையில் விழுந்த அடி காரணமாக அவரது மண்டை ஓட்டுப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதோடு, உட்புற இரத்தப்போக்கு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக குறித்த நபர் மரணத்தை தழுவியுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் இடம் பெற்ற இக் கொலைக் சம்பவத்தின் குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளை அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் - https://gulfnews.com




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe