சம்மாந்துறை அன்சார்.
குவைத்தின் சல்மியா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 5 வது மாடி குடியிருப்பில் இருந்து இந்தியர் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை 5வது மாடியிலிருந்து குதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி கூறுகையில், தனது கணவர் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், நிதி பிரச்சினைகளுக்கு ஆளாகியிருந்ததாகவும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மரணமடைந்தவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்கொலை எனக் கருதப்பட்டாலும், போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.