Ads Area

சம்மாந்துறை நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்திற்குச் சென்று குறை-நிறைகளை கேட்டறிந்த ஐ.எல்.எம். மாஹிர்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் உள்ள அல்-அக்ஸா வித்தியாலயத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பாடசாலையின்  அதிபர் ஏ.பி. ஹிபத்துல்லா அவர்களை சந்தித்து பாடசாலையின் குறை-நிறைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இந் நிகழ்வு இன்று அல்-அக்ஸா பாடசாலையில் இடம் பெற்றுள்ளது.

சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேச மாணவர்களின் நன்மை கருதி இப் பாடசாலையின் நீண்ட காலத் தேவையாகவிருந்த தரம் 10 த்திற்கான புதிய வகுப்புக்கள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

புதிதான ஆரம்பிக்கப்பட்டுள்ள தரம் 10ல் கல்வி பயிலும் மாணவர்களையும் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், தேவைகள் மற்றும் குறைகள் தொடர்பிலும் கேட்டறிந்து அவற்றினை விரைவில் நிபர்த்தி செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஏ.பி. ஹிபத்துல்லா, அல்-அக்ஸா பாடசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு. ரிபான் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

1966ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையானது ஆரம்ப காலத்தில் நெய்னாகாடு முஸ்லிம் வித்தியாலயம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்து தற்போது அல்-அக்ஸா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

ஊடகப் பிரிவு.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe