Ads Area

நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியில் படையெடுத்து வரும் யானைக் கூட்டம்.

 பாறுக் ஷிஹான்.

அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியை தினமும் மாலை யானை கூட்டம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது.

திடிரென அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை ஊடறுத்து செல்லும் சொறிக்கல்முனை வீரமுனை பகுதியின் ஊடாக செல்லும் வீதியின் ஒரு மருங்கில் குறித்த யானைகள் உலா வருகின்றன.

சுமார் 7 பேர் கொண்ட இவ்யானைகள் அப்பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்துள்ளன.

தினமும் அப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன் இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் அவ்விடத்தில் அதிகளவாக குவிந்துள்ளனர்.மேலும் இப் பிரதேசத்தில் தினந்தோறும் வயல்வெளிகளில் உள்ள வைக்கோல்களுக்கு தீ வைப்பதனாலும் காட்டில் உள்ள யானைகள் வெளிவந்த நிலையில் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர அம்பாறை மாவட்டத்தில் உள்ள வளத்தாப்பிட்டியில் வயல் காவலுக்கு நின்றிருந்த 42 வயது இளம்குடும்பஸ்தரான விவசாயி மயில்வாகனம் யோகராசா என்பவர் கடந்த திங்கட்கிழமை (22) இரவு யானையால் தாக்கப்பட்டு மரணமடைந்திருந்தார்.இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருடன் இன்னும் பலர் வேறு வேறு இடங்களில் காவலில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மை அறுவடைக் காலமென்பதால் விவசாயக் குழுவால் காவலுக்கென இவர்கள் அமர்த்தப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe