Ads Area

நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளராக கே.றிஸ்வி யஹ்சர் நியமனம்.

 (சர்ஜுன் லாபீர்)

நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளராக கே.ரிஸ்வி யஹ்சர் இன்று (04)தனது கடமைகளை நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கணக்காளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் நாவிதன்வெளிபிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றவுள்ளர்.

இலங்கை கணக்காளர் சேவை முதலாம் தரத்தினை சேர்ந்த கே.றிஸ்வி யஹ்சர் அக்கரைப்பற்று, மகாஓயா,கல்முனை ஆகிய வலயக் கல்வி அலுவலகங்களில் கணக்காளராகவும், மகாஓயா,பதியத்தலவ ஆகிய பிரதேச செயலகங்களில் கணக்காளராக கடமையாற்றியுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம் லத்தீப்,நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன்,உதவி பிரதேச செயலாளர் என்.நவனிதராஜா கல்முனை வலயக் கல்வி பணியகத்தின் கணக்காளர் வை.ஹபிபுல்லா,கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யூ.எல்.ஜவாஹீர்,பொலிஸ் திணைக்கள அம்பாறை.மாவட்ட கணக்காளர் ஏ.எம் அப்துல் அமீன்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.லதாகரன்,நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம்,மேலதிக மாவட்ட பதிவாளர் ரி.நித்தியானந்தன்,கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் மனோஜ் இந்தரஜித் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe