Ads Area

கத்தாரில் Drive-Through முறையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது!

கத்தாரில் கொரோனா தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், Drive-Through முறையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் கத்தாரில் அறிமுகம் செய்யப்பட்டது முதல், மக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில், மக்களின் இலகுவை வழங்கும் நோக்கில் இந்த  Drive-Through முறையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடைமுறை நேற்று முதல் (02.03.2021) லுசைல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவ ஆரம்பித்தது முதல், பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், இலகுபடுத்தவும்,  Drive-Through PCR மையங்கள் நிறுவப்பட்டன. அதே போன்று தான் எமது மக்களை கொரோனாவிலிருந்து காக்க  Drive-Through முறையில் தடுப்பூசிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதாக Dr. Hanan Mohamed Al Kuwari அவர்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Drive-Through என்பது ஒருவரின் காரை விட்டு வெளியேறாமல் அவருக்கு சேவையை அல்லது பிச வசதியை வழங்குதல் என்பது பொருளாகும்.

Qatar Tamil.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe