Ads Area

சவுதியில் செப்புக் கம்பிகள், மின் பிரேக்கர்கள் போன்றவற்றை திருடிய 8 பாகிஸ்தானி மற்றும் 1 இந்தியர் உட்பட 9 பேர் கைது.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள மின் விநியோக நிலையம் மற்றும் கட்டுமான பகுதிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெறுமதி மிக்க மின் பாவனைக்கான பிரேக்கர்கள் மற்றும் மின் விநியோகப் உபகரணங்கள் ஆகியவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் 9 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்களில் 8 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் 1 இந்திய நாட்டைச் சேர்ந்தவரும் உள்ளடங்குவதாக சவுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கட்டுமான வேலைத்தளங்களில் மற்றும் மின் விநியோக நிலையங்களில் உள்ள செப்புக் கம்பிகள் மற்றும் உபகரணங்கள் என ஏராளமான பெறுமதியான பொருட்களை இவர்கள் திருடி வந்துள்ளனர்.

செய்தி மூலம் - https://gulfnews.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe