சம்மாந்துறையில் உள்ள 30 பள்ளிவாசல்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு பேரீச்சம் பழங்கள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப் பகுப்பாளர் அஸ்மி யாசீன் அவர்களின் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் இடம் பெற்றது.
புனித ரமழான் மாத நோன்பினை முன்னிட்டு சம்மாந்துறையில் உள்ள 30 மஹல்லாக்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 500 தேவையுடைய குடும்பங்களுக்கு சமூக சேவை அமைப்புக்கள் ஊடாக பேரீச்சம் பழங்கள் வழங்குவதற்காக அவை சமூக சேவைகள் அமைப்புக்களிடம் கையளிக்கப்பட்டது.
இவ்வாறு பேரீச்சம் பழங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மஜ்லிஸ் அஷ்ஷூறாவின் முன்னாள் பிரதம செயலாளர் எஸ்.எச்.ஏ. ராசிக், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் முகாமையாளர் எம்.எம். மன்சூர், சம்மாந்துறை சமூக நலன் விரும்பிகள், சம்மாந்துறை சமூக சேவை கழகங்கள் என்பன கலந்து கொண்டனர்.