ஏ.பி.எம்.அஸ்ஹர்
சென்ற சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு அல்லது தேசியப்பட்டியல் மூலம் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் பிரதேச சபை உறுப்பனர்களாக செயல்பட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஓவ்வொரு வருடத்துக்குமான சுழற்சிமுறை பிரதேச சபை உருப்புரிமை வழங்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் கைச்சாத்திட்ட வேட்பாளர்களில் ஜெயச்சந்திரன் மட்டுமே உரிய முறையில் நடைமுறைப்படுத்தயுள்ளார். ஆனால் முஸ்லீம் உறுப்பினர்கள் அவ்வாறான நடவடிக்கையினை புறக்கணித்து தேசியப்பட்டியல் உறுப்புரிமையை தொடர்ந்து தம் வசப்படுத்திக்கொண்டு வருகின்றமையை கண்டித்து எதிர்வருகின்ற நாட்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு முன்பாக தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் கீழ்த்தரமான செயலை கண்டித்தும் மக்கள் ஒன்றிணைந்து கண்டனத்தை தெரிவிக்கவுள்ளனர்.
ஆகையால் சபையில் அமர்ந்திருக்கும் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் அவர்களாக முன்வந்து தேர்தலில் போட்டியிட்ட ஏனைய சக வேட்பாளர்களுக்கும் உரிய கௌரவத்தை வளங்குவதற்கு முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.