Ads Area

அக்கரைப்பற்று மாநகர பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு!

நூருல் ஹுதா உமர்

உலகில் மிகவேகமாக பரவிவருவதுடன் எமது நாட்டிலும் மீண்டும் தலை தூக்கியுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று மாநகர பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் களவிஜயமொன்று இன்று (28) காலை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜே ரத்னாயக்க, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,மாநகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும்  கலந்து கொண்டு மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe