வாழையிலை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விருந்து தான். அவை சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி விருந்து என்றால் நிச்சயம் இலையில் தான் சாப்பாடு இருக்கும். இன்றைய காலத்தில் வாழை இலை என்பது மறந்து கொண்டே போகிறது. அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் உணவு உண்கின்றார்கள். ஹோட்டலில் கூட வாழையிலை கிடைப்பதில்லை.
வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக வாழை இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் நம்மை வைக்கின்றது.
மேலும், வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக வாழை இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் நம்மை வைக்கின்றது.
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு பிரத்யேக சுவையும் மணமும் உண்டு. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்.

