Ads Area

கொரோனா தொற்று முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் - உலக சுகாதார அமைப்பு.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நிருபர்களை சந்தித்த டெட்ராஸ் அதானம், பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது. தங்களுக்கு கொரோனா வராது என இளம் வயதினர் திடமாக நம்புவதாகவும், ஆனால் அது தவறு . எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் இத்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை என கூறினார்.

அதே நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார அமைப்பின் உயரதிகாரி மரியா வான் கெர்கோவ், தொடர்ந்து 7 வாரமாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகில் கொரோனா தொற்று 9 சத்வீதம்  அதிகரித்துள்ளது.  இறப்பு எண்ணிக்கையும் ஒரே வாரத்தில்  சதவீதம்  அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe