தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய சார்ஜாவில் அல்-நஹ்தா (Al Nahda) பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் மசாஜ் செய்யச் சென்ற இந்தியர் ஒருவரை ஆபிரிக்கப் பெண்கள் நிர்மாணமாக்கி தாக்கி அவரது வங்கி அட்டைத் தகவல்களை கேட்டு மிரட்டியதால் 4வது மாடியிலிருந்து குதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வீதியில் விநியோகிக்கப்பட்ட மசாஜ் தொடர்பான விளம்பர அட்டையில் உள்ள இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர் சார்ஜாவில் உள்ள அல்-நஹ்தா (Al Nahda) பகுதி குடியிருப்பு ஒன்றின் நான்காம் மாடிக்கு மசாஜ் செய்யச் சென்றுள்ளார்.
மசாஜ் செய்ய சென்றவரை ஆறு ஆபிரிக்க ஆண்களும் பெண்களும் மடக்கிப் பிடித்து அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணங்களை எடுப்பதற்காக வங்கி அட்டைகளின் தகவல்களைக் கோரியுள்ளனர் அவர் அதனை வழங்க மறுத்தவுடன் அவரை அடித்துத் துன்புறுத்தி நிர்வாணமாக்கி அதனை வீடியோவாகப் படம் பிடித்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனால் இவர்களது பிடியிலிருந்து தப்பிப்பதற்காக குடியிருப்பின் நான்காம் மாடியிலிருந்து அந்த இளைஞர் குதித்துள்ளார் அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதனால் அந்த இளைஞர் தற்போது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சார்ஜா பொலிஸார் தற்போது விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சென்ற மாதம் இதே போல் துபாயில் மசாஜ் செய்யச் சென்ற இந்தியர் ஒருவரிடமிருந்து ரூ.55 லட்சம் பணத்தை கொள்ளையிட்ட ஆபிரிக்கப் பெண்களை துபாய் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும், இது தொடர்பான செய்தியினை வாசிக்க https://www.sammanthurai24.com என்ற இந்த லிங்கை கிளிக் செய்யவும்.