(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் , அறுகம்பே பிரதேசத்தில் சுற்றுலா துறையிலுள்ள வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாச பயணிகளுக்கு பயணசேவையை வழங்கும் வாகன சாரதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு பொத்துவில் , அறுகம்பே பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றது.
சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையும் தொழிற்பயிற்சி அதிகார சபையும் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி செயலமர்வு சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்றது.
ஏற்கனவே தொழிற்பயிற்சி அதிகார சபையினால் பயிற்சி வழங்கப்பட்ட மேற்படி சாரதிகளுக்கு அடையாள அட்டைகளை மிக விரைவாக பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்துரூபன் அனுருத்த பிரதம அதிதியாகவும் , அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.திசாநாயக கெளரவ அதிதியாகவும் , அறுகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்க தலைவர் ஏ.முஸம்மில் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் சாரதிகளுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.


