Ads Area

வீதிகளை அழகுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்மாந்துறை ரோயல் மெட்ரிட் கழகத்தினர்.

"இயற்கையால் துறையூறை அழகுபடுத்துவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் காலை 6.30 மணியிலிருந்து 10.00 மணி வரை சுமார் 72 அழகு தாவர மரக் கன்றுகள் நடும்  நிகழ்வு சம்மாந்துறை பிலாவடி லேன் பக்கடி வீதியில் நடைபெற்றது.

ஏ.ஏ.சி. நிஷாம்  அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சம்மாந்துறை விளையாட்டு கழக சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எல். சபூர்தீன் (விளையாட்டு உத்தியோகத்தர்) மற்றும் நிர்வாக உறுப்பினர் எம்.ரி.எம். ரியாஸ் (Royal Matrit விளையாட்டு கழகம்)  முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் சகோதரர் ஏ.சி. சம்சுதீன் மற்றும் ஏ.எல். புஹாரி முகைடீன் (மின் இனைப்பாளர்) மற்றும் பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.ஏ.சி. நிஷாம் அவர்கள் சம்மாந்துறை விளையாட்டுக் கழக சம்மேளனத்தினை அனுகி எமது ஊரை நாம் அழகு படுத்த வேண்டும். அதற்காக தங்களது அமைப்பினாலான ஒத்துழைப்பினை வழங்குங்கள். என்று கேட்டுக் கொண்டதற்கு அமைவாக முதலாவது செயற்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்வின் சிறப்பம்சம் என்னவெனில் தாமாக முன்வந்து  சம்மாந்துறை ROYAL MATRIT விளையாட்டு கழகம் இந்த சமூக சேவை செயற்பபாட்டினை  நிறைவேற்றியதனது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில் அந்தக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் A.A.M THANIS உட்பட நிர்வாக உறுப்பினர்கள் கழக வீரர்கள் என சுமார் 20பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் ஆரம்ப உரையினை சகோதரர்  M.T.M றிஸா நிகழ்த்தினார். அவர் அந்த உரையில் இன்றைய நிகழ்வானது மிகவும் உன்னதமானது என்றும். இந்த  மரம் நடுதலில் உள்ள பயன்கள் என்ன இதனால் எமது சமூகம் அடையக்கூடிய பயன்பாடுகள் என்ன என்பதோடு இது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடாத்துவதற்ககாக  கழகங்களுடன் ஒருங்கிணைந்து பல திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் கூறி உரையினை நிறைவு செய்தார்.

அதனைத்தொடர்ந்து இன்றைய நிகழ்வின்  தலைவர் A.A.C NIZAM உரை நிகழ்த்தினார். அவர் அந்த உரையில் இது போன்ற பல திட்டங்களை எதிர்காலத்தில் நாம் செயற்படுத்த வேண்டும். என்றும் இதனால் எமது பிரதேசத்திற்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பதோடு எதிர் காலத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு கழகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார். 

அதன் பின்னர் விளையாட்டு கழக சம்மேளனத்தின் தலைவர்  S.L. SABOORDEEN (S.O)  விளையாட்டு உத்தியோகத்தர் உரை நிகழ்த்தினார். அவரது உரையில் விளையாட்டு கழகங்கள் சமூக சேவைகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் பற்றியும் இதனால்  சமூகம் அடையக்கூடிய பயன்பாடுகள் என்ன என்பது பற்றியும் விளக்கிக் கூறியதோடு எதிர்கால சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கு சம்மாந்துறை விளையாட்டுக் கழக சம்மேளனம்  உறுதுணையாக இருக்கும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து மக்கள் வங்கி முன்னாள் முகாமையாளர் சகோதரர் A.C SAMSUDEEN உரை நிகழ்த்தினார். அவரது உரையில் இன்றைய நிகழ்வினை ROYAL MATRIT விளையாட்டு கழகத்தின் இளம் வீரர்கள் தாமாக முன்வந்து  செயற்படுத்துவதனைப் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது என்றும் இது போன்ற நிகழ்வுகளை எமது ஊரில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு கழகங்கள் முன்மாதிரியாக எடுத்து செயற்படுத்த வேண்டும் என்றும். இதனால் இளைஞர்களும் எமது சமூகமும் அடையக் கூடிய பயன்கள் என்ன என்பது பற்றியும் எடுத்துக் கூறி தனது உரையினை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து இறுதி உரையினை சம்மாந்துறை ROYAL MATRIT விளையாட்டு கழகத்தின் தலைவர் சகோதரர் A.A.M  தானிஸ் நிகழ்த்தினார். அவர் அந்த உரையில் எமது கழகமானது விளையாட்டுத்துறையில் மாத்திரமின்றி கல்வி கலாசாரம் மற்றும் சமூக சேவைப் பணிகள் என பல துறைகளிலும் பண்முகப்படுத்தப்பட் ஒரு கழகமாக செயற்படுகிறது. என்றும் எதிர்கால சமூக நலன் சார்ந்த விடயங்களில் எமது கழகத்தினால் முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்க எமது கழகம் தயாராக உள்ளது. என்றும் கூறியதோடு இன்றைய நிகழ்வினை ஏற்பாடு செய்த சகோதரர் Nizam மற்றும் சம்மாந்துறை விளையாட்டு சம்மேளனத்திற்கும் இதற்கு வருகை தந்த பிரதேச வாசிகளுக்கும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியைக்கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் செயற்பாடுகள் ஆரம்பமாகி இனிதே காலை10.00 மணிக்கு  நிறைவு பெற்றது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe