Ads Area

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் புதிய அபிவிருத்தி சங்க நிர்வாகத் தெரிவு.

தகவல் - ரிஸ்விகான்.

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் அபிவிருத்திச் சங்க புதிய நிர்வாகத் தெரிவு அண்மையில் (31) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி எம்.எம். மஹீஸா பானு அவர்களது தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. சபூர் தம்பி அவர்கள் கலந்து கொண்டதோடு  ஜமாலியா பாடசாலையின் இணைப்பாளர் அல்-ஹாஜ் அச்சி முஹம்மட், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் பழைய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட 100 வீதமான பெற்றோர்களின் ஏகமனதான முடிவின் பிரகாரம் பாடசாலையின் புதிய அபிவிருத்தி சங்க நிர்வாகத் தெரிவு இடம் பெற்றது. இதனடிப்படையில் 2021 மற்றும் 2022 இற்கான புதிய நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

01. தலைவர் - எம்.எம். மஹீஸா பானு (அதிபர்)

02. பொருளாளர் - எம்.ரி.எம். சலாம் (ஆசிரியர்)

03. செயலாளர் - எம்.ரி.எம். றிஸ்விகான் (பெற்றோர்)

உறுப்பினர்கள்.

04. எம். எஸ். முனாஸ்.

05. ஏ. நௌசாட்

06. கே.எம். தௌபீக்

07. ஏ.ஜே. அன்சார்

08. எஸ். நவாஸ்.

09. திருமதி. மதீனா (பாலர் பாடசாலை ஆசிரியர்)

மேலும் பாடசாலையின் பழைய மாணவர்களும், ஆசிரியர்களும் என இன்னும் சிலரும் பாடசாலையின் அபிவிருத்திக் சங்க நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

பாடசாலையின் எதிர்கால நடவடிக்கைகள், செயற்பாடுகள், மாணவர்களின் கல்வி மேம்பாடுகள் போன்ற விடையங்களுக்கு பாடசாலை நிர்வாகத்தினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி பணியாற்றுவதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் உறுதி பூண்டனர்.

மேலும் சம்மாந்துறை ஜலாலியான பாடசாலையின் 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான பழைய அபிவிருத்திக் சங்கத்தினால் பாடசாலையின் நலன்சார்ந்த பல்வேறு விடையங்கள் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டிருந்தது அவற்றினை இணைக்கப்பட்டுள்ள படத்தில் காணலாம்.













Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe