சம்மாந்துறை ஜனாஸா நலன்புரி ஒன்றியத்திற்கு கபன் சீலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அதன் ஸ்தாபக தலைவர் அல்ஹாஜ் ஹாபிஸ் எம்.ரி.எம். ரமீஸ் அவர்கள் தலைமையில் சம்மாந்துறை ஜபல் பள்ளிவாசலில் நேற்று இடம்பெற்றது.
வை.பி.எம். அஸ்மி யாசீன் (ஆசிய அபிவிருத்தி வங்கி) அவர்களின் வேண்டுகோளின் படி சமீர் முக்தார் ஹாஜியார் அவர்களினால் வழங்கப்பட்ட கபன் சீலைகள் ஜனாஸா ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் ஹாபிஸ் எம்.ரி.எம். ரமீஸ் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.
வழங்கப்பட்ட கபன்சீலைகள் ஏழைகளின் நன்மை கருதி முற்று முழுதாக அவர்களுக்காக பயண்படுத்தப்பட வேண்டும் என்ற நல்நோக்கத்திற்காக வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் வை.எல்.எம். ஜலீல் , மஜ்லிஸ் சூரா உப தலைவர் ஏ.எம்.எச்.எம். ரசீன், முன்னாள் மஜ்லிஸ் சூராவின் பொதுச் செயலாளர் எஸ்.எச்.எம். ராசீக் அவர்கள் மற்றும் சம்மாந்துறை மையவாடிப் பள்ளிவாசல்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.