தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவின் புதிய தொழிலாளர் சட்டதிருத்தத்திற்கு அமைய இனிமேல் வீட்டு வேலைகளுக்காக வரும் பெண் தொழிலாளிகளை குறிப்பிட அல்லது அழைக்க Servant and Maid (வேலைக்காரன் மற்றும் பணிப்பெண்) போன்ற வார்த்தைகளைப் பயண்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு ஆட்கள் கோரி செய்யப்படும் விளம்பரங்கள் மற்றும் வேலைக்கு அமர்த்தல் செயற்பாடுகள் போன்ற எந்த விடையங்களிலும் Servant and Maid (வேலைக்காரன் மற்றும் பணிப்பெண்) என அவர்களை அழைக்கவோ அல்லது குறிப்பிடவோ கூடாது அதற்குப் பதிலாக “ Workers - தொழிலாளிகள்” என அழைக்க அல்லது குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சவுதியில் வீட்டுத் தொழிலாளிகளின் கௌரவம், சுயமரியாதை போன்றவற்றை காக்கும் நோக்கிலேயே இவ்வாறான திருத்தம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் வீட்டுத் தொழிலாளர்கள் தங்களது தொழில் தொடர்பிலும், தொழில் மாற்றம் தொடர்பிலும் எந்தவித கட்டணங்களும் செலுத்தத் தேவையில்லை என்றும், அவ்வாறு அவர்களை செலுத்தக் கோர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் தொழிலாளர்கள் ஒப்புதலுடன் மட்டுமே செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் வேலை விளம்பரங்களில் முதலாளிகள் தொழிலாளிகள் தொடர்பான கொடுப்பனவுகளை, அவர்களது தனிப்ப தகவல்களை, புகைப்படங்களையும் பொதுவெளியில் பகிரக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.