குவைத்தில் நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்த அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர் எனவும்,தலையில் பலமாக தாக்கியதால் கொல்லப்பட்டார் எனவும்,உயிரிழந்தவர் கோழிக்கோடு குட்டியாடி பகுதியை சேர்ந்த நாசர்(வயது- 49) என்பது தெரியவந்துள்ளது.
இந்த கொலை தொடர்பான கூடுதல் தகவல் வெளியாகியுள்ளன. மங்காப்பில் நேற்று(23/04/21) வெள்ளிக்கிழமை மாலை இருவரும் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தமிழகத்தைச் சேர்ந்தவர், உயிரிழந்த நாசரை இரும்புக் கம்பியால் தலையில் பலமாக தாக்கினார், இதனால் நாசர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீசார் தடயவியல் சோதனைக்கு பிறகு பிரேத பரிசோதனைக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சண்டையின் போது காயமடைந்த குற்றவாளி போலீசார் காலில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுபோல் இவர்களுடன் அறையில் தங்கியிருந்த மேலும் மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றன. உயிரிழந்த நாசருக்கு நிஷாதா என்ற மனைவியும்,ஷினாஸ் என்ற ஒரு மகனும் உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
செய்தி மூலம் - https://www.arabtamildaily.com