Ads Area

முன் அனுமதி இல்லாமல் உம்ரா யாத்திரை செல்வோருக்கு 10,000 ரியால் அபராதம் - சவுதி அரேபியா.

அனுமதி இல்லாமல் உம்ரா யாத்திரை செல்வோருக்கு 10,000 ரியால் அபராதம் (சுமார் 5 இலட்சம் இலங்கை ரூபா ) விதிக்கப்படும் என சவூதி அரேபியா அரசு எச்சரித்துள்ளது.

ரமழான் மாதத்தில் உம்ரா அல்லது வேறு ஏதேனும் யாத்திரைக்கு வருவோர் உரிய அனுமதி இல்லாமல் யாத்திரை மேற்கொள்ள முயற்சித்தால் 10,000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என சவூதி அரேபியா அரசு எச்சரித்துள்ளது. 

பெர்மிட் இல்லாமல் மக்கா மஸ்ஜிதுல் ஹரத்திற்கு செல்ல முயற்சிக்கும் நபர்களுக்கு தலா 10,000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கா மசூதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாத்ரீகர்களிடம் அனுமதி இருக்கிறதா என அனைத்து சாலைகளிலும், சோதனை சாவடிகளிலும் செக்யூரிட்டி அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். விதிமீறலில் ஈடுபடும் யாத்ரீகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மக்கா பள்ளிவாசலுக்கு தினசரி 50,000 உம்ரா யாத்ரீகர்கள் வரை அனுமதிக்கப்படுவர். ரமழான் நாளில் ஒரு லட்சம் பேர் அனுமதிக்கப்படுவர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே உம்ரா யாத்திரை மேற்கொள்ளவும், மக்கா மசூதிக்கு வரவும் அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe