Ads Area

புதிய வளத்தாப்பிட்டியில் இலவச கர்ணிகா கல்வியகம் திறந்து வைப்பு.

(காரைதீவு   சகா)

ஒருசமுதாயம் அபிவிருத்தியடைய வேண்டுமாயின் அச்சமுகம் கல்வியில் முன்னேற்றமடைய வேண்டும். அதன்படி இங்கு இன்று திறந்து வைக்கப்படும் கர்ணிகா கல்வியம் பின்தங்கிய இக்கிராம அபிவிருத்தியில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்பது எனது நம்பிக்கை.

இவ்வாறு புதியவளத்தாப்பிட்டியில் இலவச கர்ணிகா கல்வியத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்துரையாற்றிய சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

இக்கல்வியகத்திறப்பு விழா அண்மையில் கிராம முக்கியபிரமுகர் வி.வினோகாந்த் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

கனடாவில் ஜந்துவயதில் இறையடிசேர்ந்த குழந்தை கர்ணிகா மடோனா மொறிஸ் அவர்களின்  முதலாம்வருட ஞாபகார்த்தமாக தாயக குழந்தைகளின் கல்வி விருத்திக்காக இக்கல்வியகம் நேற்று புதியவளத்தாப்பிட்டியில்  திறந்துவைக்கப்பட்டது.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

புதிய வளத்தாப்பிட்டி மக்களான நீங்கள் அம்பாறையில் இருந்து வன்செயலின்போது எமது காரைதீவு மண்ணில் 5வருடகாலம் தஞ்சமடைந்து பின்னர் இங்கு குடியேற்றப்பட்டு இன்றுடன் 26வருடங்களாகின்றன.

இங்குள்ள குழந்தைகள் வளத்தாப்பிட்டி மல்வத்தை வரை சென்று கல்வியயைத்தொடருவதும் பிற்பகலில் எவ்வித பிரத்தியே கல்வி வசதிகளும் இல்லாமலிருப்பதால் பல மாணவர்கள் இடைநடுவில் கல்வியை கைவிடுவதாகவும் நண்பர் வினோகாந்த் என்னிடம் கூறினார்.

அதற்காக இலவச கல்வியகத்தை திந்து பிள்ளைகளை ஊக்குவிக்க உதவவேண்டும் எனக் கேட்டார். நானும் உடன்பட்டு கர்ணிகாவின் பெற்றொரின் உதவியுடன் இன்று இக்கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதருவேன். புத்தாண்டு சிறுவர் விளையாட்டு விழாவையும் செய்யவேண்டும்.

புலமைப்பரிசில் சித்தியயெய்திய மாணவருக்கு தவிச்சக்கரவண்டி வழங்கவும் திட்டமிட்டுள்ளேன். எனவே மாணவர் மாத்திரமல்ல பெற்றோர்களும் இதில் அக்கறை காட்டவேண்டும் என்றார்.

உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சிறப்புரையாற்றினார்.

மாணவர் பெற்றோர்களுக்கு ஆரோக்கியபானமாக ஆரோக்கியாவின் இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe