Ads Area

இன்று முதல் இலங்கைக்கு பயணத்தடை விதித்துள்ள பஹ்ரைன்.

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகையை பஹ்ரைன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகளின் நுழைவை பஹ்ரைன் மே 24ஆம் திகதி முதல் நிறுத்தி வைத்துள்ளது என அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எதிர்மறையான பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும் என்பதுடன், பஹ்ரைன் வந்தடைந்ததும் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பஹ்ரைன் நாட்டின் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்கள் தங்கள் இல்லத்தில் அல்லது தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற தனிமைப்படுத்தப்பட்ட வசதியில் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முடிவு பஹ்ரைன் அரச செயற்குழு உத்தரவுகளுக்கு இணங்கவும், சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்களான கோவிட் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மருத்துவ பணிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe