Ads Area

உலக அளவில் கொரோனா தடுப்பூசியால் பில்லினியர்களான 9 தடுப்பூசி நிறுவனர்கள்.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை உலக நாடுகளை புரட்டிப் போட்டு சிதைத்துவருகிறது. கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு தொடங்கியுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பால் 35 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றுதான் ஒரே தீர்வு எனும் நோக்கில் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஆனால், தடுப்பூசி தயாரிக்கும் உரிமை குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மட்டுமே இருப்பதால் இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அந்த நிறுவனங்கள் அதிகம் லாபம் பார்க்கின்றன. அதனால், ஏழை நாடுகள் பாதிக்கப்படுகின்றன என்ற பலரும் குற்றம் சாட்டிவருகின்றன.

மக்கள் தடுப்பூசி கூட்டணி எனும் அமைப்பு, இந்த கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் மூலம் மருந்து தயாரிக்கும் 9 நிறுவனங்கள் பில்லியன்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர் என்று புகார் தெரிவித்துள்ளது.

01. ஸ்டீபன் பன்செல் - மாடெர்னா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மொத்த மதிப்பு: 4.3 பில்லியன் டாலர் | தடுப்பூசி மூலம் 430 கோடி டாலர் வருமானம்


02. உகுர் சகின் பையோஎன்டெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி | மொத்த மதிப்பு: 4 பில்லியன் அமெரிக் டாலர்  கொரோனா தடுப்பூசி மூலம் 400 கோடி டாலர் வருமானம்.


03. திமோதி ஸ்பிரிங்கர் | மாடெர்னா நிறுவனத்தின் நிறுவன முதலீட்டாளர் | மொத்த மதிப்பு: 2.2 பில்லியன் டாலர் | கொரோனா தடுப்பூசி மூலம் 220 கோடி டாலர் லாபம்.


04. நௌபர் அஃபியான் | மாரெட்னா நிறுவனத்தின் இணை நிறுவனர் | மொத்த மதிப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் | கொரோனா தடுப்பூசி மூலம் 190 கோடி டாலர் லாபம்.


05. ஜூயன் லோபஸ்-பெல்மோன்டி | ரோவி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக 24 ஆண்டுகள் பணியாற்றியவர் | மொத்த மதிப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் | கொரோனா தடுப்பூசி மூலம் 180 கோடி டாலர் லாபம்.


06. ராபர்ட் லேன்ஜெர் | மாடெர்னா நிறுவனத்தின் நிறுவன முதலீட்டாளர் | மொத்த மதிப்பு: 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் | கொரோனா தடுப்பூசி மூலம் 160 கோடி டாலர் லாபம்.


07. சூ டவு | கேன்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் | மொத்த மதிப்பு: 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் | கொரோனா தடுப்பூசி மூலம் 130 கோடி டாலர் லாபம்.


08. குயு டாங்சூ | கேசினோ பயோலாஜிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் | மொத்த மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் | கொரோனா தடுப்பூசி மூலம் 120 கோடி டாலர் லாபம்.

09. ஹெலன் மாவோ | கேன்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் | மொத்த மதிப்பு: 1 பில்லியன் அமெரிக்க டாலர் | கொரோனா தடுப்பூசி மூலம் 100 கோடி டாலர் லாபம்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe