தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தைச் சேர்ந்த கப்பல் உற்பத்தி நிறுவனமான சீகேட் ஷிப்யார்ட் (Seagate Shipyard) தனது முதலாவது இரண்டு மாடி மிதக்கும் வீட்டினை உருவாக்கியுள்ளது. இந்த மிதக்கும் வீடானது நான்கு படுக்கையறைகள், வாஷ்ரூம்கள், பால்கனி, கண்ணாடி நீச்சல் குளம், சமையலறை, படுக்கை அறை, தொழிலாளர்களுக்கு இரண்டு கூடுதல் அறைகள், மற்றும் ஏராளமான கண்ணாடி தரையையும் கொண்டு உருவாக்கப்பட்டதாகும் இது 900 சதுர மீட்டர் பரப்பளவான வீடாகும்.
இந்த மிதக்கும் வீடானது சிறப்பு ஹைட்ராலிக் என்ஜின்கள் மூலம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பாதுகாப்பாக செல்ல கூடியதாகவும், மேலும் வீட்டில் உள்ள கழிவுநீரை சுத்திகரிக்க சூரிய ஆற்றல் மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களையும் இது கொண்டு சர்வதேச பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் வீடானது ராஸ் அல் கைமாவில் உள்ள அல் ஹம்ரா துறைமுகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது மேலும் இது துபாயின் ஜுமேரா பகுதியில் குடியேற்றத்திற்காக விடப்படவுள்ளது.
சீகேட் ஷிப்யார்டின் (Seagate Shipyard) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முஹம்மது எல்பஹ்ராவி இது குறித்து கூறுகையில், துபாயில் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முக்கிய காரண எமிரேட்ஸ் ஒரு முக்கிய சுற்றுலா மற்றும் முதலீட்டு இடமாக இருப்பதும், அதன் நெகிழ்வான பொருளாதார கொள்கைகள் மற்றும் வலுவான உள்கட்டமைப்பு ஆகியவையே எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மிதக்கும் வீட்டை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பால்விந்தர் சஹானி அபு சபா என்பவர் 20 மில்லியன் திர்ஹத்திற்கு வாங்கியுள்ளார்.