Ads Area

டெங்கிலிருந்து மக்களை காக்க புகைவிசிறலை ஆரம்பித்துள்ள காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்.

மாளிகைக்காடு நிருபர்- நூருல் ஹுதா உமர்

கொரோனா நாட்டில் வேகமாக பரவுவதை போன்று மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கும் பரவலாக நாட்டில் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முகமாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீரின் ஆலோசனையுடன் டெங்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக டெங்கு காய்ச்சல் அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாளிகைக்காடு, காரைதீவு 12 மற்றும் காரைதீவு 05 ஆம் பிரிவில் உள்ள இடங்களில் புகைவிசிறல் செயற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றதுடன் மக்களுக்கு விழிப்புணர்வு அறிவித்தல்களும் இதன்போது வழங்கப்பட்டது. அடிக்கடி மழை பெய்து கொண்டிருப்பதால் சுற்றுச்சூழலில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களையும், நுளம்பு பெருகும் பொருட்கள் அனைத்தையும் அகற்றி டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe