சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தில் வயிற்றுக்குல் மறைத்து வைத்து போதை மாத்திரைகளை கடத்த முற்பட்ட ஆண்-பெண் இருவரை சவுதி விமான நிலையப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
வெளிநாடு ஒன்றிலிருந்து ஜித்தா கிங் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தில் (King Abdul Aziz International Airport) வந்திறங்கிய ஆண்-பெண் இருவரின் நடத்தையில் சந்தேகமுற்ற பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரனை செய்ததில் அவர்கள் தங்களது வயிற்றில் மறைத்து உணர்ச்சியிழக்கச் செய்யும் கோகோயின் (cocaine) ரக போதை மாத்திரைகளை கடத்த முற்பட்டமை தெரிய வந்துள்ளது.
இருவரையும் எக்ஸ்-ரே (X-ray scan) பரிசோதனை செய்து பார்த்ததில் இருவரும் கோகோயின் (cocaine) ரக போதை மாத்திரைகளை விழுங்கி அவற்றினை வயிற்றுப் பகுதிக்குல் மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
பெண்ணின் வயிற்றில் 683.5 கிராம் எடையுடைய 60 போதை மாத்திரைகளும், ஆணின் வயிற்றில் 918.5 கிராம் எடையுடைய 80 போதை மாத்திரைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரனைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.