சம்மாந்துறை அன்சார்.
இம் முறை வெளிநாட்டினருக்கும் ஹஜ் கடமையினை நிறைவேற்ற சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சவுதி செய்திகள் தெரிவிக்கின்றனர். மிகக் கடுமையான சுகாதார நடமுறைகளைப் பின்பற்றியே வெளிநாட்டினருக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்படவுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள சுகாதார நிறுவனங்களின் ஆலோசனைகள், மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கடுமையான சுகாதார சட்டதிட்டங்களைப் பின்பற்றியே வெளிநாட்டினரும் அனுமதிக்கப்படவுள்ளதாக சவுதி அரேபிய ஹஜ்-மற்றும் உம்ரா அமைச்சகவும் தெரிவித்துள்ளது மேலும் இதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய விபரக் கோவை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இவ் வருடம் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
சவுதி அரேபியாவில் ஒவ்வொரு வருடமும் 2.5 மில்லியன் யாத்திரீர்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்ற மக்காவில் ஒன்று கூடுகின்றனர் ஆனால் முதன் முறையாக தற்போதைய கொரேனா தாக்கத்தின் காரணமாக கடந்த வருடம் சுகாதார நடைமுறைகளைப் கவனத்தில் கொண்டு 1000 பேர் வரைதான் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

