சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் இரு இந்திய இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சவுதி அரேபியாவின் ரியாத் அருகே அல்ரைனில் இடம் பெற்ற வீதி விபத்தில் விபத்தில், கேரளா மாநில மலப்புரத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளர், உயிரிழந்தவர்கள் முகமது வசீம்(வயது-34) மற்றும் முகமது முனீப் (வயது-29) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஈத் அல் பித்ர் நோன்புப் பெருநாளில் இவர்கள் தமாமிலிருந்து அப்ஹாவுக்கு சென்று பின்னர் திரும்பும் வழியில் அவர்கள் பயணித்த கார் எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவி விபத்துச் சம்பவம் காலை 6 மணிக்கு இடம் பெற்றதாகவுமு், விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர்களின் உடல்கள் அல்ரைன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காரில் இருந்த மற்றொரு நபர் படுகாயமடைந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.