Ads Area

கொவிட் தொற்றுக் காரணமாக தமது தொழிலை இழந்த வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கென விசேட காப்புறுதித் திட்டம்.

கொவிட் தொற்று காரணமாக தொழிலை இழந்தவர்களின் நன்மை கருதி விசேட காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களின் நன்மை கருதியே இந்தத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக இந்த காப்புறுத்திட்டத்தை வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு காப்புறுதி உரித்து வழங்கல்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் காப்புறுதி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், அதனால் புலம்பெயர் பணியாளர்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் போது உயர்ந்தபட்சம் 600,000 ரூபாய்களும், முழுமையான அங்கவீனம் ஏற்படும் போது உயர்ந்த பட்சம் 400,000 ரூபாய்களும் இழப்பீடு வழங்கப்படும். ஆனாலும் குறித்த புலம்பெயர் பணியாளர்களுக்கு வேலைத்தளங்களில் இடம்பெறும் பல்வேறுபட்ட தொழிற்சாலைகள் மற்றும் வீட்டுமட்ட விபத்துக்கள், பல்வேறு நோய்வாய்ப்படல், முதலாளிமாரால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் மற்றும் துன்புறுத்தல்களால் ஏற்படும் உள ரீதியானதும் சுகாதார ரீதியானதுமான பிரச்சினைகளுக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ளல், மற்றும் கொவிட் - 19 தொற்று நிலைமையால் தொழில் இழத்தல் போன்றவற்றுக்காக எந்தவொரு காப்பீடுகளும் இல்லை. அதனால் குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு புலம்பெயர் பணியாளர்களுக்கு பொருத்தமான காப்புறுதி முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Madawala News.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe