Ads Area

அமீரகத்தில் பொது இடங்களில் யாராவது அநாகரீகமான முறையில் நடந்து கொண்டால் 1 இலட்சம் திர்ஹம் அபராதம், 3 மாத சிறை.

சம்மாந்துறை அன்சார்.

அமீரகத்தில் பொதுவிடங்களில் யாராவது அநாகரீகமான முறையிலோ அல்லது ஒழுக்கமற்ற ரீதியிலோ நடந்து கொண்டால் அவர்களுக்கு அமீரக பெடரல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு (358) இன் படி  1 இலட்சம் திர்ஹம் அபராதமும், 3 மாதம் வரையான சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என அமீரக அரச வழக்கறிஞர் எச்சரித்துள்ளனர்.

பொது ஒழுக்கக் கொள்கைகளை மீறும் எந்தவொரு செயலையேனும் யாராவது செய்தால் அவர்களுக்கு இத் தண்டனை வழங்கப்படும். மேலும் ஆண்-பெண் பொதுவெளிகளில் அநாகரீகமாக நடந்து கொண்டாலும் அவர்களுக்கும் இத் தண்டனை பொருந்தும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும், அவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தவுமே இவ்வாறான சட்டங்கள் விதிக்கப்பட்டு, அதனை மீறுவோருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாகவும் அமீரக அரச வக்கீல்கள் இதனை தெரிவித்துள்ளனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe