புதுடெல்லி,
கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் இடைவிடாமல் பணியாற்றுகின்றனர். முதலாவது கொரோனா பரவலின் போது மொத்தம் 736 மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.
இந்தநிலையில் இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில், பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 594 உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 21 மருத்துவர்கள் உயிரிழந்தாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.