சம்மாந்துறை நிருபர்
சம்மாந்துறை தைக்கா பள்ளி வளாகத்தில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் செய்கையானது வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டது.
சம்மாந்துறை தைக்கா பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.எம் சஹீட் அவர்களின் தலைமையில் இவ் மஞ்சள் அறுவடை இன்று (13 )மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிவாசல் வளாகத்தில் மொத்தமாக ஒன்பது பாத்திகளில் இவ் பயிர்ச் செய்கையிடப்பட்டது.அதில் இரண்டு பாத்திகளில் இருந்து 65kg அளவிலான மஞ்சள் இதன் போது அறுவடை செய்யப்பட்டது.
இவ் அறுவடை நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா,சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர்,சம்மாந்துறை மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையங்களுக்கான நிலைய பொறுப்பதிகாரி எம்.டி.எ கரீம்,அரச சட்டவாதி சட்ட முதுமாணி எம்.ஏ.எம். லாபிர்,கிராம உத்தியோகத்தர்,பள்ளி வாசல் நிருவாக உறுப்பினர்கள் என குறிப்பிட்ட அளவானோர் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.