Ads Area

நூறு வருடம் பழமை வாய்ந்த வீதிக்கு நீண்ட இழுபறிக்கு பின்னர் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது !

 நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பிரதேச இசங்கணிச்சீமையில் நீண்ட காலமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் சில அரச உத்தியோகத்தர்களால் இழுத்தடிப்பு செய்யப்பட்ட வீதிக்கு பிரதான நீர் இனைப்பு பெறுவதற்காக விடாமுயற்சியுடன் செயற்பட்டு எனது முயற்சியினால் இன்று பிரதான நீர் குழாய் பொருத்தப்பட்டது என அக்கறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ எம் ஐய்யூப் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்களினால் கூறப்பட்ட புராதான இடங்களை பராமரித்தல் என்ற அடிப்படையில் நூறு வருடங்கள் பழமை வாய்ந்த  இசங்கணிச்சீமை கிராமத்தில் அமைந்துள்ள ஷியாறம் வீதிக்கு மக்களின் பங்களிப்புடன் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அக்கறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ எம் ஐய்யூப்

தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ எல் எம் அதாவுல்லா அவர்களுக்கும், இந்த குடிநீர் குழாய் பிரதான இணைப்பு  இடுவதற்காக தன்னுடன் ஒருமித்து பயணித்த அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் ஏ றாசிக் மற்றும் சில உத்தியோகத்தர்களால் கழுத்தறுப்பு செய்யப்பட்டாலும் அதை முறியடித்து தனது பிராந்தியத்தின் முகாமையாளர் என்ற அடிப்படையில் சிறப்பாக செயல்பட்ட அக்கரைப்பற்று பிராந்திய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை முகாமையாளர் ஜனாப் முஷாஜித் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் இந்த பிராந்தியத்தின் பொதுமக்கள், பள்ளிவாசலின் தலைவர் உட்பட நம்பிக்கையாளர் சபை சார்பில் தெரிவித்து கொள்கிறேன். 

மேலும் பக்கச்சார்பின்றி மக்களுக்கான சேவையை சிறப்பாக செய்ய ஒத்துழைப்பு வழங்கிய அரச உத்தியோகத்தருக்கும் இப்பணிக்காக இரவு பகல் பாராது தனது கடமையைச் செய்த அக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தர்களுக்கு எனது விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe