தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவிற்கு வெளியே இருக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் இக்காமா, Exit/re-entry விசா மற்றும் விசிட் விசா அனைத்தும் இலவசமாக ஜூலை 31 வரை நீட்டிக்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறைக்காக தாயகம் சென்றார்கள் மீண்டும் சவுதி திரும்ப முடியாமல் இருக்கக்கூடிய அனைவருக்கும் இக்காமா மற்றும் விசிட் விசா அனைத்தும் 31, ஜூலை 2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட்ட சவுதி அரேபியா நுழைவதற்கு தடை செய்யப்பட்ட நாடுகளிலிருந்து சவுதி வரமுடியாமல் இருக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் இந்த கால நீட்டிப்பு பொருந்தும்.
இதற்கு முன்னர் சவுதி அரேபியாவிற்குல் நுழைய பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து மீண்டும் சவுதிக்கு திரும்ப முடியாத நபர்களின் விசாக்களை ஜூன் 02ம் திகதி வரை இலவசமாக நீட்டிக்க மன்னர் சல்மான் உத்தரவிட்டிருந்தார் தற்போது இது மீண்டும் ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
தகவல் மூலம் - https://ksaexpats.com