(எச்.எம்.எம்.பர்ஸான்)
தொடர் பயணத்தடை காரணமாக சிகையலங்கார தொழில் நூறு சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட கல்குடாத்தொகுதி சிகையலங்கார சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.அஸ்பீர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட முதலாவது கொரோனா அலையிலிருந்து மூன்றாவது அலை வரைக்குமான காலப்பகுதியில் எமது தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
தமது சங்கத்தின் கீழ் 15 சிகையலங்கார நிலையங்கள் இயங்கி வருவதோடு, அதில் 45 பேர் தொழில் புரிந்து வருகின்றனர்.
இந்த அசாதாரண சூழ்நிலையில் வாழ்வாதாரங்களை இழந்து தொழிலின்றித் தவிக்கும் தமது தொழிலாளர்கள் விடயத்தில் அரச அதிகாரிகளும் தொண்டு நிறுவனங்களும் கவனஞ்செலுத்த வேண்டுமென சங்கத்தின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.