Ads Area

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக எ.எல்.அப்துல் மஜீத் நியமனம்.

(வி.ரி.சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக(கல்வி அபிவிருத்தி)  எ.எல்.அப்துல் மஜீத் நேற்று (18) முதல் உடன் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் சஹூதுல் நஜீம் இந்நியமனத்தை வழங்கினார்.

பிரதிக் கல்விப் பணிப்பாளராக(கல்வி அபிவிருத்தி) கடந்த 4வருடங்களாக கடமையாற்றிய எ.எம்.நௌசாட் கடந்தவாரம் மாவனல்ல சாஹிறாக்கல்லூரிக்கு அதிபராக நியமனம் கிடைத்துச்சென்ற காரணத்தினால் இவ்வெற்றிடம் ஏற்பட்டது.

சம்மாந்துறையைச் சேர்ந்த இவர் இதற்கு முன் உதவிக் கல்விப் பணிப்பாளராக(திட்டமிடல்)கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe