சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள புதிய வளத்தாப்பிட்டி கிராமத்துள்ள குடும்பங்களுக்கு பிரதேச செயலகத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் (8) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் முதற்கட்டமாக 291 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி உலருணவுப் பொதிகள் பிரிவுக்குரிய கிராம உத்தியோகத்தர் ஊடாக இக்கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.