சம்மாந்துறை அன்சார்.
ஹஜ் கடமைக்காக இந்த வருடம் 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவார்கள் என சஊதி அரேபிய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் யாத்திரிகர்கள் அடங்குவார்கள் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஹஜ் யாத்திரிகர்கள் சஊதி அரேபியாவை வந்தடைந்ததும் உடனடியாக 03 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
முதலாவது தடுப்பூசி ஷவ்வால் மாதம் முதலாம் பிறையில் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஈதுல் பித்ர் தினத்தன்று பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது தடுப்பூசியை சவூதி அரேபியாவை வந்தடைவதற்கு 14 நாட்களுக்கு முன் பெற்றிருக்க வேண்டும்.
சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள 2021 ஹஜ் செய்வதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு,
1) உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யாத்ரீகர்களை உள்ளடக்கிய 60,000 நபர்கள் மட்டுமே இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
2) ஹஜ் செய்வோர் 18-60 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
3) ஹஜ் செய்வோர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
4) ஹஜ் செய்வோர் ஹஜ் பயணம் செய்வதற்கு முன்பு கடந்த 6 மாதங்களுக்குள் எந்தவொரு நோய்க்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கக்கூடாது. அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்
5) யாத்ரீகர்கள் தடுப்பூசியின் இரு அளவுகளையும் எடுத்திருக்க வேண்டும். அந்தந்த நாடுகளின் சுகாதார அமைப்பு வழங்கிய தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்
6) எடுக்கப்பட்ட தடுப்பூசி சவுதி அரேபியாவிற்குள் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருக்க வேண்டும்.
7) யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவுக்கு வந்தவுடன் வெளிநாட்டு யாத்ரீகர்கள் 3 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
Covd19 தடுப்பூசியின் முதல் டோஸ் 1 வது ஷவால் 1442 ஆல் எடுத்திருக்க வேண்டும். அதாவது நோன்புப் பெருநாள் அல்லது அதற்கு முன்னர் எடுத்திருக்க வேண்டும்.
9) தடுப்பூசியின் 2 வது டோஸ் சவுதி அரேபியாவிற்குள் வருவதற்கு 14 நாட்களுக்கு முன்பாக எடுக்க வேண்டும்.
10) சமூக தூரத்தை பின்பற்றுதல் மற்றும் மாஸ்க் அணிவது மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாத்திரிகர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.