டியூசன் நடாத்துவது தொடர்பில்முதல்வரின் அறிவித்தல்..!
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சில டியூட்டரிகளிலும் வீடுகளிலும் டியூசன் நடத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டு நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் தனியார் வகுப்புகளுக்கும் அரசினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பயணத்தடையும் அமுலில் உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் டியூசன் நடாத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதனை மீறி யாராவது டியூசன் நடத்துவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களிடம் 02 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் இத்தால் அறிவிக்கப்படுகிறது
முதல்வர் ஊடகப் பிரிவு.