எம்.யூ.எம். றுமைஸ்.
சம்மாந்துறை வீரத்திடல் அல்-ஹிதாயா மகாவித்தியாலய கேட்போர் கூடத்திற்கு அஸ்மி யாசீன் அவர்களினால் 50 கதிரைகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு அண்மையில் (23.07.2021) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியில் பணி புரியும் திரு. அஸ்மி யாசீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, தனது முயற்சியினால் பெறப்பட்ட 50 கதிரைகளை சம்மாந்துறை வீரத்திடல் அல்-ஹிதாயா மகாவித்தியாலய அதிபர் ஜனாப் எம்.எல் பதியுத்தீன் அவர்களிடம் கையளித்தார்.
சம்மாந்துறை வீரத்திடல் அல்-ஹிதாயா மகாவித்தியாலயமானது நாவிதன்வெளிக் கோட்டத்தில் மத்தியமாக அமைந்திருக்கும் ஒரு மகா வித்தியாலயம் என்பதால் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெறும் நிகழ்வுகளில் மாணவர்கள் அமர்வதற்கு போதியளவான கதிரைகள் இன்றி மாணவர்கள் பல காலமாக சிரமப்பட்டு வந்திருக்கின்றனர். அரசியல்வாதிகள், தனவந்தர்கள் என பலரிடமும் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை யாராலும் பாடசாலை கேட்போர் கூடத்திற்கு தேவையான கதிரைகள் பெற்றுக் கொடுக்க முடியவில்லை இதனால் சுமார் 10 வருடகாலமாக மாணவர்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
இந் நிலையில் இது தொடர்பில் மௌலவி அல்-ஹாஜ் ஐ.எல் அப்துல் முனாப் ஆசிரியர் அவர்கள் திரு. அஸ்மி யாசீன் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க அஸ்மி யாசீன் அவர்களினால் 50 கதிரைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் ஜனாப் வை.பி.எம் அஸ்மி யாசீன் அவர்களின் சேவையினைப் பாராட்டி பாடசாலை அதிபர் எம்.எல் பதியுத்தீன் அவர்களினால் பொண்ணாடை போத்தியும் கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான ஜனாப் ஏ.எம். ஜெஸீல், எம்.ரீ.எ. சத்தார் அவர்களும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.