தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் இன்று (2021-07-14) வரை மொத்தமாக 8020 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளதாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 24 மணித்தியாலத்திற்குல் புதிதாக 1226 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 1128 பேர் குணமடைந்துள்ளதாகவும், 14 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவுதி சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
இதுவரை சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 504,960 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 486,011 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8020 ஆகவும் உயர்ந்துள்ளது.