தகவல் - சம்மாந்துறை அன்சார்.
பஹ்ரைனில் மஹர் (அரபு நாடுகளில் மணமகனிடமிருந்து மணமகள் பெற்றுக் கொள்ளும் வரதட்சனைதான் மஹர்) பணத்திற்காக 3 ஆண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி திருமணம் முடித்த பெண் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
பஹ்ரைனில் அரபு பெண் ஒருவர் மஹர் பணத்திற்காக தன்னை திருமணம் ஆகாதவர் எனக் காட்டிக் கொண்டு 3 ஆண்களை ஏமாற்றி, அவர்களை ஒரே நேரத்தில் திருமணம் முடித்துள்ளார், அப் பெண் திருமணம் முடித்த 3 ஆண்களும் நண்பர்களாவர் இருந்தும் அவர்கள் 3 பேரின் மனைவியும் ஒரே ஆள்தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஒவ்வொருவரிடமிருந்தும் மஹர்ப் பணமாக அப் பெண் 4500 பஹ்ரைன் தினார்களைப் பெற்றுள்ளார். ஒவ்வொருவரிடமும் தன்னை வேறு வகையில் அறிமுகப்படுத்தி ஏமாற்றியே இவ்வாறு திருமணம் முடித்துள்ளார்.
முதலாவதாக திருமணம் முடித்தவருடன் 4 மாதங்கள் இருந்த நிலையிலேயே அவருக்குத் தெரியாமல் மற்றவரை திருமணம் முடித்து அவரிடம் ஒரு மாதம் வரை இருந்து விட்டு மூன்றாவது நபரையும் திருமணம் முடித்துள்ளார் இந் நிலையில் மூன்றாவது நபருக்கு இவரது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் உண்மை அம்பலத்திற்கு வந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டு அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.