(மாளிகைக்காடு நிருபர் -நூருல் ஹுதா உமர்)
சம்மாந்துறை அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்ய வங்கிச்சங்கம் சமூக நலன் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அடிப்படை தேவையாகக் காணப்படுகின்ற கண் சத்திர சிகிச்சை கூடத்திற்கு ஏழு இலட்சம் பெறுமதியான தளபாடங்களை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் எம். ஹனிபா தலைமையிலான நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.